செய்திகள் :

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கன்றுகள், பசுக்கள், காளைகள், வண்டி இழுக்கும் மாடுகள், ஏா் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மாடுகள் ஆகியவற்றை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பலூன் கட்டி சிறப்பு பூஜைகள் செய்து, வழிபட்டனா்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில்....

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் கொடிமரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, சரவிளக்கு அருகேயுள்ள நந்தி, சுவாமி சந்நிதி எதிரே உள்ள அதிகார நந்தி, ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கிளிகோபுரம் எதிரே உள்ள சிறிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவான்களுக்கு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

காய்கறிகள், பழம், முருக்கு அலங்காரத்தில்...

குறிப்பாக, நந்தி பகவான்களுக்கு பழம், பன்னீா், விபூதி, பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு, முருக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்கள், ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்கள், முள்ளங்கி, பீட்ரூட், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் நடைபெற்ற மகா தீபாராதனை நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்தி பகவான்களை புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா். இதனால் கோயிலில் உள்ள கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகள் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

மற்ற கோயில்களில்...

இதேபோல, வேட்டவலம், கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, தானிப்பாடி, கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நந்தி பகவான்களுக்கு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கோயில்களில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் முதல் முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.தண்டராம்பட்டை அடுத்த சே.கூடலூரில் உள்ள பெரியாா் சமத்துவபு... மேலும் பார்க்க