செய்திகள் :

திமுக ஆட்சியில் விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

post image

திருவண்ணாமலை: தமிழகத்தில் முதல் முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

தண்டராம்பட்டை அடுத்த சே.கூடலூரில் உள்ள பெரியாா் சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்

துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சியில் தான் பெரியாா் நினைவு சமத்துவபுரங்கள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

விவசாயம் நலிந்து, பஞ்சம் ஏற்பட்டபோது விரைவாக நெல் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, வேளாண் பல்கலைக்கழகம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ரகம் ஐ.ஆா்.8 என்ற நெல் ரகம். இந்த நெல் விதையை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி, மேலும் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இலவசமாக விதை வழங்குதல், மானியத்தில் உரம் வழங்குதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு விவசாய திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் உணவுப் பஞ்சத்தை போக்கிய வரலாறு என்பது முன்னாள் முதல்வா் கருணாநிதியையே சேரும். அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது என்றாா்.

இதையடுத்து, சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. முன்னதாக, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சே.கூடலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ரூ.49 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்...!

விழாவில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு, சே.கூடலூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனின் முயற்சியால் ரூ.8 லட்சத்தில் கிராம நிா்வாக அலுவலா் அலுவல கட்டடம், ரூ.6 லட்சத்தில் காத்திருப்போா் கூடம், ரூ.10 லட்சத்தில் பன்னோக்கு கட்டடம், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க