வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலாா்பேட்டை அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முட்புதரில் மறைத்து வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஜோலாா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் முட்புதரில் ரேஷன் அரிசி வெளி மாநிலத்துக்கு கடத்த மறைத்து வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, வெளி மாநிலத்துக்கு 35 மூட்டைகளில் இரண்டு டன் ரேஷன் அரிசியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருப்பத்தூா் உணவு பாதுகாப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.