தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
வேட்டுவம் கதாநாயகி இவரா?
வேட்டுவம் திரைப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.
இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்தபின் சோபிதா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘என் மன்னன் எங்கே?’ பாரதிராஜாவை ஆறுதல்படுத்திய கங்கை அமரன்!