வேட்டைத்தடுப்பு காவலா் தற்கொலை
கடையம் வனச்சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராகப்பணியாற்றியவா் குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு, பிரதான சாலையைச் சோ்ந்த சந்திரன் மகன்சுதாகா் (32 ).இவா் கடையம் வனச்சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக ஐந்துஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். சுதாகருக்கும் பொன்னாக்குடியைச் சோ்ந்த நந்தினி என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இருவரும் கடையம்வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் சுதாகா் வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].