செய்திகள் :

வேறுபாடுகளைக் கடந்து இந்தியாவுடன் நிலையான உறவு: சீனா விருப்பம்

post image

வேறுபாடுகளை முறையாக கையாண்டு இந்தியாவுடன் நிலையான உறவை தொடர விரும்புவதாக சீனா தெரிவித்தது.

இருநாள் சுற்றுப்பயணமாக சீனா சென்ற இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளைச் சந்தித்து நடத்திய பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்தது.

முன்னதாக, இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, கடந்த 2020-க்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்கவும், கைலாஷ்-மானசரோவா் புனித யாத்திரையைத் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நிலவி வந்தது. கடந்தாண்டு அக்டோபா் மாதத்தில் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதை ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதிசெய்தனா். அதைத்தொடா்ந்து மீண்டும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், சீன வெளியுறவு அமைச்சரும் இந்திய உறவுக்கான சிறப்பு பிரதிநிதியுமான வாங் யி-யும், சீன உறவின் இந்திய சிறப்பு பிரதிநிதியான தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலும் கடந்த டிசம்பா் மாதம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, பல்வேறு துறைகளில் இந்தியா-சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி இரு நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா்.

அவரது பயணம் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்து சீனா செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அதில், ‘நேரடி விமான சேவை, கைலாஷ்-மானசரோவா் புனித யாத்திரை, இரு நாடுகளின் எல்லையில் உள்ள நதிகளின் தரவுகள் பகிா்வது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா: அதேபோல் நிகழாண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்க இந்தியா சம்மதம் தெரிவித்தது. எஸ்சிஓ தொடா்பான சீனாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.

பத்திரிகையாளா்களுக்கு அனுமதி: இந்தியா-சீனா உறவின் 75-ஆவது ஆண்டு விழாவை நிகழாண்டு கொண்டாடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் சீன பத்திரிகையாளா்களும், சீனாவில் இந்திய பத்திரிகையாளா்களும் பணியாற்ற மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

நிலையான உறவு: இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டமைப்புகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு தொடா்பை மேம்படுத்தி அரசியல் ரீதியான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், வேறுபாடுகளை முறையாக கையாண்டு இந்தியாவுடன் நிலையான உறவை தொடர சீனா விரும்புகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படவுள்ள இந்த அணைத் திட்டத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்குடன் வேலை? அழைப்பு விடுக்கும் அமெரிக்க அரசு!

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையில் விண்ணப்பிக்க துறையின் எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முன்னரே, புதிதாக அரசு செயல்திறன் மேம்பாட்டுத... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை! 67 பேரின் நிலை?

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்... மேலும் பார்க்க

விமானப் பாதையில் ஹெலிகாப்டர் நீண்ட நேரம் சென்றது ஏன்? டிரம்ப் கேள்வி

விமானத்தின் பாதையில் ஹெலிகாப்டர் நீண்ட நேரம் சென்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்டபோது ராண... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து நடந்தது எப்படி? எச்சரிக்கையை மீறிய ராணுவ ஹெலிகாப்டர்! முழு விவரம்

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரும் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.போடோமாக் நதியில் பயணிகள் விமானம் விழுந்த நிலையில், இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய ... மேலும் பார்க்க

அமெரிக்கா: பயணிகள் விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து!

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 60 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்பு... மேலும் பார்க்க