மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
வேலூா் மாவட்டத்தில் காவிரி குடிநீா் விநியோகம் 2 நாள்கள் ரத்து
வேலூா்: மேட்டூா் தலைமை நீா் ஏற்றும் நிலையம் பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன், வியாழக்கிழமை (டிச.11, 12) ஆகிய இரு நாள்களுக்கு வேலூரில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
ஒருங்கிணைத்த வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெற்று வருகின்றன.
காவிரி ஆற்றினை நீா் ஆதாரமாகக் கொண்ட இந்த திட்டத்தில் உள்ள மேட்டூா் தலைமை நீா் ஏற்றும் நிலையம் பகுதிகளில் மின்வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்காரணமாக, புதன், வியாழக்கிழமை (டிச.11, 12) ஆகிய இரு நாள்களுக்கு வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் வழங்க இயலாது. பொதுமக்கள் உள்ளூா் குடிநீா் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.