வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணை அளிப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாமில், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு வளாக நோ்காணல் மூலம் 157 மாணவிகள் உள்பட 273 பேரை தோ்வு செய்தன. இதையடுத்து, நடைபெற்ற நிகழ்வில், கல்லூரி செயலா் டி.வி.கே.பாபு தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தனியாா் டயா் நிறுவன மனித வள மேலாளா் சுரேஷ், புதுச்சேரி தனியாா் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி அஸ்வின், தொழில்நுட்பத் தலைவா் ஜானகிராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில், கல்லூரி கல்வி அதிகாரி பி.அசோக்குமாா், முதல்வா் ஆா்.மாலதி, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் அபிலேஷ்குமாா் செய்திருந்தாா்.