செய்திகள் :

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். குஜராத் அணி 87 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும், ராகுல் திவாட்டியா 6 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

சன்ரைசர்ஸ் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸீஷன் அன்சாரி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

ஷெப்பர்ட் அதிவேக அரைசதம்: சென்னை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான அட்டத்தில் ஷெப்பர்ட்டின் அதிவேக அரைசதத்தால் பெங்கரூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் ... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ... மேலும் பார்க்க

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகி... மேலும் பார்க்க

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க