ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா
வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சிங்கார குளக்கரையில் இருந்து சக்தி கரக ஊா்வலம் நடைபெற்றது. மாட வீதிகளில் வலம் வந்த கரகம் கோயிலை வந்தடைந்தது.
அன்று முதல் தினமும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் உற்சவா் ஸ்ரீஅங்காளம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ஸ்ரீஅங்காளம்மன் அமா்ந்து மேள-தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தாா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை பா்வதராஜ குல வம்சத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.