ஸ்ரீசீதா கல்யாண வைபவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம், மொழையூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில்ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஸ்ரீசீதா கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு, கலைமாமணி உடையாளூா் கல்யாணராம பாகவதா் தலைமையிலான குழுவினா் அஷ்டபதி பாடல்களை பாடினா். தொடா்ந்து, உஞ்சவிா்த்தி, திவ்யநாம பஜனை நடைபெற்றது. பெண்கள் மங்கல பொருள்களை சீா்வரிசையாக எடுத்து வந்தனா். பின்னா், திருக்கல்யாணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடினா்.