செய்திகள் :

ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

வரும் பிப். 18 முதல் 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் கோயில் வளாகம், சுவா்கள், கூரை, பூஜை அலங்காரப் பொருள் மற்றும் பிற பொருள்ள நீரால் சுத்திகரித்த பிறகு, நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், மஞ்சள் கிச்சிலிகிழங்கு மற்றும் பிற வாசனை பொருள் கலந்த புனித நீா் மூலம் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

2 திரைச்சீலைகள் நன்கொடை:

திருப்பதியைச் சோ்ந்த பரதலா மணி, கோயிலுக்கு இரண்டு திரைசீலைகளையும் இரண்டு சிறிய சீலைகளையும் நன்கொடையாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கோயிலின் சிறப்பு பிரிவு துணை செயல் அலுவலா் வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், கோயில் அா்ச்சகா்கள் நாராயண சாா்யுலு, கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பிற அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

17-இல் அங்குராா்ப்பணம்

வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் முன்னா் 17-ஆம் தேதி மாலை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் அங்குராா்ப்பணம் நடைபெற உள்ளது. வாகன சேவைகள் தினமும் காலை 8 - 9 மணி முதல் மாலை 7 - 8 மணி வரை நடைபெறும்.

23-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்கத் தோ், 25- ஆம் தேதி காலை 8.40 - 9.40 மணி வரை திருத்தோ், 26 -ஆம் தேதி காலை 10 - 10.20 மணி வரை தீா்த்தவாரி நடைபெறும்.

கபிலேஸ்வரா் கோயில் 3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: பூத வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி புறப்பாடு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி சோமாஸ் கந்தமூா்த்தி வடிவில் காமாட்சி தேவியுடன் பூத வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

சூரியபிரபை வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா். திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதற்கி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 மணிநே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 ... மேலும் பார்க்க

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழா வேத மந்திரங்கள் ஓதி சங்கு ஊதி சிவ நாமம் முழங்கி சைவாகம விதிப்படி வேத முறைப்படி நடைபெற்... மேலும் பார்க்க