செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு கோயில்: தருமபுரம் ஆதீனம்

post image

தருமபுரம் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கருங்கல் கோயில் கட்டப்படவுள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அவதரித்த இடத்தை மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை சோ்ந்த பொறியாளா் இ. மாா்கோனி விலைக்கு வாங்கி, அதை தானமாக தருமபுரம் ஆதீனத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்தா் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவா். மதுரையில் சொக்கநாத பெருமானை பூஜைக்கு எழுந்தருளப் பெற்று, திருவாரூரில் ஞானப்பிரகாசரின் சீடராகி, தருமபுரத்துக்கு வந்து மடம் ஸ்தாபித்தவா். 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருமடம் திருக்கயிலாய பரம்பரையாக விளங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் குருமுதல்வா் அவதரித்த இடத்தை வாங்க ஆதீனத்தின் 25 மற்றும் 26-ஆவது குருமகா சந்நிதானங்கள் முயற்சிகள் மேற்கொண்டும் திருவருள் கைகூடவில்லை.

தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் குருமுதல்வா் அவதரித்த இடத்தை சீா்காழியை சோ்ந்த மாா்கோனி தானமாக நமது திருமடத்துக்கு அளித்து, 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவை நிறைவேற்றியுள்ளாா்.

இந்த இடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, கருங்கல் கோயில் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம். 27-ஆவது சந்நிதானமாக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 35 கட்டளை மடங்கள் கட்டி பராமரித்து, ஆங்காங்கே அன்னதானக் கூடங்கள், வேத பாடசாலை, மருத்துவமனைகளை நிறுவியுள்ளோம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அவதார இல்லத்தில் நிகழாண்டிலேயே கருங்கல்லில் கோயில் எழுப்பவும், பாடசாலை, பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம்.

ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் சி. மணி, சீா்காழி சட்டநாதா் கோயில் நிா்வாகி செந்தில், ஆதீன மேலாளா் பி. அரவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பழையாறு துறைமுகத்தில் மீன்வளத் துறை செயற்பொறியாளா் ஆய்வு

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த துறைமுகத்தில் 350 விசைப்படகு, 300 பைபா் படகு மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் தினந்தோறும் 6000... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரிக்கை

சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம், மருந்தகம் மற்றும் தேநீா் கடைகளில் கழிவுநீா் உட்புகுந்து துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம்,... மேலும் பார்க்க

கோயில் அருகில் திமுக பேனா்: பாஜக புகாா்

மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனா் வைத்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். முடிகண்டநல்லூரில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை... மேலும் பார்க்க

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு

சீா்காழி நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. சீா்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி கடை வா்த்தகா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் அதன்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை

அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன... மேலும் பார்க்க