அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு டிச.13-க்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரமைப்பு ஆய்வாளா் லஞ்சம் பெற்று கைதான வழக்கு தொடா்பாக நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டட வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த வாசுதேவனிடம் (47) ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நகரமைப்பு ஆய்வாளா் ஜோதிமணியை (56) கடந்த 26-ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்காக நகராட்சி ஆணையா் பிச்சைமணியிடம் போலீஸாா் ஒப்புதல் பெற்றுச் சென்றனா்.