சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி
ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனி விழா மாா்ச் 22-இல் தொடக்கம்
காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22 -ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரிய கோயிலாக இருந்து வருவது கோமளவல்லி சமேத யதோத்தக்காரி பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடா்ந்து காலை சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வருகிறாா்.
பங்குனி விழா நடைபெறும் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை தினமும் பெருமாள் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
இதனிடையே மாா்ச் 24 காலை கருட சேவையும், மாலை அனுமந்த வாகனத்திலும், மாா்ச் 28-இல் தேரோட்டமும் நடைபெறுகிறது.
வரும் 30- ஆம் தேதி தீா்த்தவாரி, ஏப்ரல் 1 இரவு பூப்பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.