செய்திகள் :

ஹரியாணாவில் 1500 கிலோ எடையில் எருமை.. உலர் பழங்கள், 20 முட்டை உணவு!

post image

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு எருமை 1500 கிலோ எடையில் இருக்கிறதாம். நாள்தோறும் இதற்கு உலர் பழங்கள், 20 முட்டைகள் வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் வேளாண்துறை கண்காட்சியில் பல்வேறு வகையான கால்நடைகள் பங்கேற்கும் நிலையில் இதுபோன்ற கொழு கொழு மாடுகள் எப்போதும் தனிக்கவனம் பெறுவது வழக்கம்.

அந்த வகையில், அன்மோல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த எருமைமாடு கிட்டத்தட்ட 1500 கிலோ எடையில் இருக்கிறது.

தற்போது, இதன் உடல் எடையை விட, அதன் சொகுசு வாழ்க்கைதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. இதன் உரிமையாளர் கில், இதற்காக நாள்தோறும் ரூ.1500 செலவிட்டு உணவளித்து வருகிறார். உணவு என்றால், ஏதோ எருமைகள் சாப்பிடும் வைக்கோல், பிண்ணாக்கு என்று நினைக்க வேண்டாம்.. சாரி..

அதன் நாள்தோறும் உணவு முறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைதான் இதன் அன்றாட உணவாம். இன்னும் உடல் எடையை அதிகரிக்க ஆயில் கேக், நெய், சோயாபீன்ஸ், சோளம் போன்றவையும் சிறப்பான உணவாக்கப்பட்டு வழங்கப்படுமாம்.

இந்த அன்மோல், எப்போதும் வேளாண் கண்காட்சி, கால்நடை கண்காட்சிகளில் பங்கேற்பதற்காக என்று வளர்க்கப்பட்டு வருகிறது. ஏதேனும் கால்நடை போட்டியென்றால், அன்மோலை எந்த எருமையாலும் வெல்ல முடியாதாம்.

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளிப்பாட்டி, அதற்கென அழகிய கூடாரம் அமைத்துப் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கே இருந்து வருகிறது என்றால், அன்மோலின் தாய் மற்றும் சகோதரியும் இப்படியே வளர்க்கப்பட்டு கோடியில் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அன்மோலின் விந்துவுக்கு பயங்கர தேவை இருப்பதால் அதுவும் விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த வகையில் மட்டும் 4-5 லட்சம் மாதந்தோறும் வருவாய் ஈட்டப்படுகிறதாம்.

தற்போது விற்பனைக்கு கொண்டு வந்தால் அன்மோல் மதிப்பு ஜஸ்ட் ரூ.23 கோடி மட்டுமே என்கின்றன தகவல்கள். ஆனால், உரிமையாளருக்கு இப்போதைக்கு விற்கும் எண்ணமில்லையாம்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட்!

தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் இன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் த... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்... மேலும் பார்க்க

மண்டல பூகைக்காக சபரிமலை நடைதிறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.கேரளத்தின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை

மகாராஷ்டிரத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ... மேலும் பார்க்க

700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது

குஜராத்தில் நடுக்கடலில் 700 கிலோ போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டது.போதைப்பொருள் கடத்தலில், 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந... மேலும் பார்க்க

டேஹ்ராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்: 6 பேர் பலி

டிரக்டேஹ்ராடூனில், விருந்துக்குச் சென்று திரும்பியவர்களின் இரவுப் பயணம் மிகக் கொடூரமான விபத்தில் முடிந்துள்ளது. இதில் காரில் வந்த 6 இளம் உயிர்கள் பறிபோனது.அதிகவேகத்தில் வந்த எம்யுவி கார், சாலையில் கண்... மேலும் பார்க்க