செய்திகள் :

ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி: கிரிக்கெட் வீரர் அஸ்வின்

post image

ஸ்ரீபெரும்புதூர்: ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என தண்டலம் அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

பின்னர் பேசிய அஸ்வின், தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா , ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்டார். தமிழுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். ஹிந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று தெரிவித்தார். மேலும் நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்றும், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன். கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை என்று தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்: அதிபர் ஜோ பைடன்!

வாஷிங்டன்: கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் எனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. தான் போட்டியிட்டிருந்தால் டொனால்டு டிரம்பை தோற்கடித்திருக்க முடியும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.உலகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகப்படியின் போது திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாமி தரிசனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 831 அடியில் இருந்து 758 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு

விழுப்புரம்: வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் ... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் பட டீசர்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் ... மேலும் பார்க்க