செய்திகள் :

ஹிந்து நம்பிக்கைகள் அவமதிப்பு: கார்கேவுக்கு பாஜக கண்டனம்

post image

உத்தர பிரதேச மாநிலம், திரிவேணி சங்கமத்தில் பாஜக தலைவர்கள் புனித நீராடியதை விமர்சனம் செய்ததன் மூலம் ஹிந்துகளின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார் என்று மகாராஷ்டிர பாஜக தலைவரும் மாநில வருவாய்த் துறை அமைச்சருமான சந்திரசேகர் பாவன்குலே தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அண்மையில் புனித நீராடினர். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிடுகையில், "கேமராக்களுக்காக பாஜக தலைவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர்; இவர்கள் சங்கமத்தில் புனித நீராடுவதால் நாட்டின் ஏழ்மை அகன்றுவிடுமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பாவன்குலே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்காக ஹிந்துகளின் நம்பிக்கை, கலாசாரத்தை காங்கிரஸ் அவமதித்துள்ளது. கார்கேயின் இந்த விமர்சனம் மடமையுடன் ஹிந்துக்கள் மீதான தாக்குதலாகும்.

பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பல ஆயிரம் ஹிந்துகள் புனித நீராடும் கும்ப மேளாவை கிண்டல் செய்வதன் மூலம் கங்கையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான ஹிந்துகளின் நம்பிக்கையையும் கார்கே அவமதித்துள்ளார். அவரது இந்த அறிக்கை நகைப்புக்குரியது மட்டுமின்றி மிகவும் கோபமடைய செய்வதாகும். ஹிந்துகள் எப்போதும் சகிப்புத் தன்மையுடன் உள்ளனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை கிண்டலடிக்க கார்கேவுக்கு யார் உரிமை அளித்தது? ஹிந்துகளின் வாக்குகளைக் கோரும் காங்கிரஸ், அவர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறது. ஹிந்துகள் என்ன தவறு செய்தார்கள்? கடந்த 6 தசாப்தங்களாக நாட்டை ஆள காங்கிரஸுக்கு அவர்கள் அனுமதி அளித்ததுதான் தவறா?

பெரும்பான்மை ஹிந்து மக்களின் நம்பிக்கையை கிண்டல் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை காங்கிரஸ் திருப்திப்படுத்த முயல்கிறது. இன்று கும்ப மேளாவை கிண்டல் செய்யும் காங்கிரஸ் கட்சி நாளை ஆட்சிக்கு வந்தால், கும்ப மேளாவை நிறுத்துவார்களோ என்பதே ஹிந்துகளின் கவலையாகும்.

ஹிந்துக்களின் சம்பிரதாயங்களை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வதென்பதை வாக்காளர்கள் முடிவு செய்வர் என்றார்.

இருளில் நாட்டின் எதிர்காலம்: மோடி உரையை விமர்சித்த கார்கே!

ஆளும் பாஜக அரசால் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

பிகார்: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்!

பிகாரில் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்ததால், காவல் துறையைக் கண்டித்து இச்சம்பவத்தில் கிராம மக்க... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்... மேலும் பார்க்க

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க