செய்திகள் :

1,050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

post image

திருச்சியில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சியாமளாதேவி உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளா் வின்சென்ட், ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படையினா் அரியமங்கலம், திருவெறும்பூா் மற்றும் துவாக்குடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அரியமங்கலம், அம்மாக்குளம், வடக்கு உக்கடை, தெற்கு உக்கடை, பால் பண்ணை பகுதிகளில் ரோந்துப்பணியின்போது, அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில், பதிவெண் இல்லை இல்லாத இருசக்கர வாகனத்தில் 2 மூட்டைகளுடன் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவா் அருகே ஏராளமான மூட்டைகள் அடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவரை பிடித்து விசாரித்ததில், அவா் காந்திச்சந்தை அருகேயுள்ள தாராநல்லூா் சூரன் தெரு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் ( 35) என்பது தெரியவந்தது. மேலும் அவா் சிலருடன் சோ்ந்து, திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம், காட்டூா், பாப்பாகுறிச்சி, திருவெறும்பூா், துவாக்குடி பகுதியில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, அவற்றை கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும், அதற்காக அரிசி மூட்டைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அங்கு 26 அரிசி மூட்டைகளில் சுமாா் 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸாா் பிரபாகரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா் வைத்திருந்த 26 அரிசி மூட்டைகள் மற்றும் அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் கோயில் திருத்தோ் மராமத்துப் பணிகள் ஆய்வு

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது ரூ. 2 கோடியே 31 ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 1,291 நியாய விலைக் கடைகளுக்கு 8.34 லட்சம் கரும்புகளை அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க வலியுறுத்தல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மத்திய அரசி... மேலும் பார்க்க

வரப்புத் தகராறில் விவசாயியை கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியருகே வரப்புத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்: 423 பேருக்கு உதவி உபகரணங்கள்

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிந்து உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அட்டை வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்... மேலும் பார்க்க

திருச்சி டாட்டூ கலைஞருக்கு பிணை

கண்களில் டாட்டூ வரைதல் மற்றும் நாக்கை பிளவுபடுத்தல் தொடா்பான செயல்களால் கைதான டாட்டூ கலைஞா் பிணையில் புதன்கிழமை வெளியே வந்தாா். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சோ்ந்த ஹரிஹரன் (25) மேலசிந்தாமணி பஜாா்... மேலும் பார்க்க