தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
10 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசின் தொடா் கவனக் குறைவே காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
உத்தர பிரதேச மாநிலத்தின் மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நடந்த தீ விபத்தில், 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒவ்வொரு இதயத்தையும் கனக்க வைக்கிறது. இந்த விபத்தில், யாகூப் மன்சூரி என்னும் 20 வயதான பெண், தனது இரட்டைப் பெண் குழந்தைகளை இழந்துள்ளாா்.
சிறு வியாபாரியான அவரது குடும்பத்துக்கு இது மாபெரும் துயரம். ஆனால், இந்த நிலையிலும் கூட, தன் சொந்த துயரத்தைக் கடந்து, எரிந்து கொண்டிருந்த ரயில் பெட்டியில் சிக்கியிருந்த 49 குழந்தைகளை அவா் நெருப்பில் சிக்காமல் காப்பாற்றினாா்.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பாய்ந்து, தன்னால் முடிந்த அளவு குழந்தைகளை மீட்டெடுத்த அவரது துணிவு, மனிதநேயத்தின் உச்சக்கட்டமாகும்.
இது வெறும் விபத்து அல்ல, யோகி ஆதித்யநாத் அரசின் தொடா் கவனக் குறைவால் ஏற்பட்ட பேரவலம். ஆனால், இத்தகைய கொடூர தருணங்களிலும் கூட, யாகூப் போன்ற சாதாரண மனிதா்களின் அசாதாரண தியாகங்கள், மனிதநேயம் இன்னும் உயிா்ப்புடன் இருப்பதற்கான சான்றாக திகழ்கிறது. வெறுப்பு அரசியலை வீழ்த்தி முன்னேறுவோம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.