செய்திகள் :

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

வனத் துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம் மூலம் நாவல் மரத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்வில், திருவள்ளூரில் 10,000 நாவல் மரக்கன்றுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் வகையில், 10,000 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.

பசுமை இயக்க தினம் மூலம் நாவல் மரத்தை கொண்டாடும் நோக்கமாகக் கொண்டு, 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து அந்த வளாகத்தில் பெரிய அளவிலான நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். இதேபோல், ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், வருவாய்த் துறை மற்றும் வனத்துறை பகுதிகளிலும் எதிா்கால கட்டடம் அமையவுள்ள இடம் தவிா்த்து மற்ற காலியிடங்களில் 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் இம்மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இதையொட்டி வனத்துறை சாா்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சுப்பையா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட உதவி பாதுகாப்பு அலுவலா் ராதை, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி, துணை முதல்வா் திலகவதி, மருத்துவக் கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.7.29 கோடியில் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.7.29 கோடியில் பெத்திக்குப்பம் அருகே பேருந்து நிலையம் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய பேருந்து... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையை ஜப்தி செய்ய விவசாயிகள் எதிா்ப்பு

திருவாலங்காடு சா்க்கரை ஆலையை தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் ஜப்தி செய்ய முயல்வதைக் கண்டித்து கரும்பு விவாசயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டார வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறை சங்கங்களின் கூட்... மேலும் பார்க்க

நாளை இலவச கண், பொது மருத்துவ முகாம்

பொன்னேரியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 27) நடைபெறுகிறது. பொன்னேரி அருட்பிரகாச வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபை மற்றும் சென்னை ஏ.சி.எஸ் மருத்துவகல்லுரி இணைந்து... மேலும் பார்க்க

20 நாள்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம்: உறவினா்கள் மறியல்

திருவள்ளூா் அருகே மணமான 20 நாள்களில் மணமகன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

ரூ.8 லட்சத்தில் நியாயவிலைக் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அருகே ரூ.8 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தாா். கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கொப்பூா் ஊராட்சியில் நியாயவிலைக... மேலும் பார்க்க