சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
``11 பாட்டில் பீர் குடித்து விட்டு, பேண்டில் உச்சா போன ஐ.டி. இளைஞர்'' - விமான பயணத்தில் ரகளை
அமெரிக்காவில் இருந்து விமானத்தில் இந்தியா வரும் பயணிகள் சில நேரங்களில் மது குடித்துவிட்டு செய்யும் ரகளையை தாங்க முடியாது. அந்த ரகளையில் `சிறுநீர் கழிப்பது' முதலிடத்தில் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மும்பை ஐ.ஐ.டி பட்டதாரியான 25 வயது இளைஞர் விமானத்தில் செய்த ரகளை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

சர்வதேச விமானத்தில் மது இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். அந்த ஐ.ஐ.டி பட்டதாரியான இளைஞர் விமானத்தில் பயணம் செய்த 16 மணி நேர பயணத்தில் 11 பாட்டில் பீர் குடித்துள்ளார்.
இது குறித்து அதே பயணத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் கேதர்பால் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் இருந்த ஐ.ஐ.டி. பட்டதாரி வாலிபர் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.4.39 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அவர் தீபாவளியை கொண்டாட இந்தியா வந்தபோது 11 பாட்டில் பீர் குடித்தார். விமான பணிப்பெண் 3 பாட்டிலுக்கு மேல் கொடுக்க மறுத்தார். உடனே அந்த வாலிபர், அவருடன் வந்த மூன்று பேரிடம் சொல்லி, அவர்களது பங்கு பீர்களையும் வாங்கிக்கொடுக்கும்படி கேட்டு வாங்கி குடித்தார்.
அவர் குடித்து முடித்த சில நேரத்தில் தனது பேண்டிலேயே சிறுநீர் கழித்துவிட்டார். அவரால் இருக்கையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. சிறுநீர் நாற்றத்தால் நாங்கள் சிறிது நேரம் வேறு இருக்கையில் மாறி அமர்ந்தோம்.
அந்த சம்பவத்திற்கு பிறகு, அவரால் எங்களை பார்க்க கூட முடியவில்லை. அமெரிக்காவில் ரூ.4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஒருவரால் விமான பயணத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மது அருந்தவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், கெளரவும் தனது பங்கு பீர் பாட்டில்களை வாங்கி ஐ.ஐ.டி பட்டதாரிக்கு குடிக்க கொடுத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியானவுடன், நெட்டிசன்கள் “நீங்கள் ஏன் அவருக்கு கூடுதலாக பீர் வாங்கிக்கொடுத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, “ஐ.ஐ.டி பட்டதாரியை நான் குறை சொல்லமாட்டேன்” என்றும், “அவருக்கு பீர் வாங்கிக்கொடுத்த உங்களைப் போன்றவர்கள்தான் தங்களது செயலை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவர் வெளியிட்ட பதிவில், "நீங்கள் நெறிமுறையை மீறிவிட்டீர்கள். விமானப் பணிப்பெண் ஏதோ உணர்ந்திருக்க வேண்டும், அதனால் அவர் அவருக்கு கூடுதல் பீர் கொடுக்க மறுத்துவிட்டார்" என்று வேறொருவர் சுட்டிக்காட்டினார்.
மற்றொருவர் வெளியிட்ட பதிவில், "இந்தக் கதையை நான் நம்பவில்லை. நீங்கள் ஒரு மோசமான பொய்யன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஒருவர், "இது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட கதை" என்று கருத்து தெரிவித்தார்.
விமானங்களில் இது போன்ற செயல்கள் நடப்பது புதிதல்ல. 2023-ஆம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் மிஸ்ரா, நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றபோது, சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததற்காக போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விமானத்தில் சாப்பாடு முடிந்த பிறகு விளக்குகள் மங்களாக எரிந்த போது 70 வயதுடைய பெண் மீது அவர் சிறுநீர் கழித்தார். இதையடுத்து மிஸ்ராவிற்கு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.