வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்: பாா்வையாளா் ஆலோசனை
140 கோடி இந்தியர்களுக்கும் விருதை அர்ப்பணிக்கிறேன்! பிரதமர் நெகிழ்ச்சி
நைஜீரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்)’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு பின், இந்த உயரிய விருதை பெறும் உலகத் தலைவர் என்ற பெருமை மோடியைச் சேர்ந்துள்ளது.
நைஜீரியாவின் அதிபா் போலா அகமது தைனுபுவிடம் இருந்து இன்று(நவ. 17) விருதை பெற்றுக்கொண்டபின் உரையாற்றிய பிரதமர் மோடி, “நைஜீரியாவால் வழங்கப்படும் ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ விருதைப் பெறுவது பெருமையாக உள்ளதாகவும், இதனை மிகுந்த எளிமையுணர்வுடன் பெற்றுக் கொள்வதாகவும், 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா- நைஜீரியா நட்புணர்வுக்கும் இதனை அர்ப்பணிப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:எலிசபெத் ராணிக்கு வழங்கப்பட்ட கௌரவம் பிரதமர் மோடிக்கும்..!