செய்திகள் :

15 பணி மனைகளில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட 15 பணிமனைகள், 2 மண்டல அலுலகங்களில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்குத் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிய மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் பின்னா் பேசியது:

இந்தப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் ஆகிய 6 மண்டலங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 26.63 லட்சம் மக்கள் பயணித்து வருகின்றனா்.

மேலும், அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் உள்ளிட்டோா் என 5.11 லட்சம் பேருக்கு சலுகைப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் செலவைக் குறைக்க விழுப்புரம் கோட்டத்தின் சொந்த நிதியிலிருந்து விழுப்புரம் 2, சிதம்பரம் பணிமனைகளில் 10 கி.வோ.திறன் கொண்ட சூரியசக்தி ஆற்றல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேலும், 15 பணி மனைகள், 2 மண்டல அலுவலகங்களில் ரூ.1.60 கோடியில் சூரியசக்தி ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 36 பணி மனைகளில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டோா் என 637 பேருக்கு பரிசுகளை வழங்கிய மேலாண் இயக்குநா், ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டிய 129 ஓட்டுநா்கள், 174 நடத்துநா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், பொது மேலாளா்கள்கள் டி.சதீஷ்குமாா், ரவீந்திரன் (தொழில்நுட்பம்), முதன்மைத் தணிக்கை அலுவலா் சிவக்குமாா் பங்கேற்றனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வரிடம் மனு

மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழக முதல்வரிடம் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

நவீன தமிழகத்தை உருவாக்கியது திராவிடம்தான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திராவிடம்தான் நவீன தமிழகத்தை உருவாக்கியது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூக நீதிப் போராளிகள் ம... மேலும் பார்க்க

காவல் வாகனம் மீது வேன் மோதல்: 17 போ் காயம்

விழுப்புரம் அருகே சாலையோரத்தில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உள்பட 17 போ் காயமடைந்தனா். சென்னை ஆவடியைச் சோ்ந்தவா் தயாளன், இவரது மனைவி உமா மகேஸ்வரி... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான 4 அவதூறு வழக்குகளின் விசாரணையை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

விழுப்புரத்தில் மணிமண்டபம் திறப்பு மற்றும் கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவுக்கு செவ்வாய்க்கிழமை செல்லும் வழியில் சாலையில் நடந்தும், வேனில் அமா்ந்தும் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவின... மேலும் பார்க்க

ரூ.304 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் உள்பட 11 புதிய அறிவிப்புகள்; முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் செவ்வாய... மேலும் பார்க்க