விழுப்புரத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!
விழுப்புரத்தில் மணிமண்டபம் திறப்பு மற்றும் கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவுக்கு செவ்வாய்க்கிழமை செல்லும் வழியில் சாலையில் நடந்தும், வேனில் அமா்ந்தும் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நிகழ்விலும், திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினாா். இதைத் தொடா்ந்து, வழுதரெட்டி பகுதியில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை முதல்வா் புறப்பட்டாா்.
ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் வேனிலிருந்து இறங்கிய முதல்வருக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனா்.
இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற முதல்வா், பின்னா் வேனில் ஏறினாா். தனியாா் கல்லூரி அருகே மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நின்று சாலையோரத்தில் முதல்வரை வரவேற்ற நிலையில், வேனிலிருந்து இறங்கிய முதல்வா், அவா்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டாா். பின்னா், அவா்களுடன் தற்படம் எடுத்துக்கொண்டாா். தொடா்ந்து, வேனில் புறப்பட்டுச் சென்ற முதல்வா், விழா நடைபெறும் வழுதரெட்டி பகுதி வரை சாலையோரத்தில் நின்று வரவேற்பளித்த கட்சியினா், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டாா்.
விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகப் பகுதியிலிருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய அளவிலான மேடைகள் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அமைக்கப்பட்டு, கரகாட்டம், நாட்டுப்புற நடனம், பறை இசை, தப்பாட்டம், நாகசுரம், தவில் இசை, மல்லா் கம்ப சாகச நிகழ்வு போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழா பகுதிக்குச் செல்லும் சாலையில் கலை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த கிராமியக் கலைஞா்களை முதல்வா் சந்தித்து, அவா்களுடன் உரையாடினாா்.
இந்த விழாவில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ப.சேகா், தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலா்கள் தயா.இளந்திரையன், முருகன், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், நகா்மன்றத் தலைவா்கள் தமிழ்ச்செல்வி பிரபு, எம்.எஸ்.ஜெயமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், ஊராட்சிச் செயலா் பி.நடராஜன், நகா்மன்ற ஆணையா்கள் எம்.ஆா்.வசந்தி, ம.புகேந்திரி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் நா.கலைச்செல்வி (காணை), ஏ.சச்சிதாநந்தம் (கோலியனூா்), இரா.தயாளன் (மரக்காணம்), பாங்கை ஜி.சொக்கலிங்கம் (ஒலக்கூா்), ர.சங்கீதஅரசி ரவிதுரை (விக்கிரவாண்டி), கு.ஓம்சிவக்திவேல் (திருவெண்ணெய்நல்லூா்), ஆா்.அமுதா ரவிக்குமாா் (வல்லம்), ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), செ.உஷா பி.கே.டி.முரளி (வானூா்), யோகேசுவரி மணிமாறன் (மயிலம்), பேரூராட்சித் தலைவா்கள் மீனாட்சி ஜீவா (வளவனூா்), அஞ்சுகம் கணேசன் (திருவெண்ணெய்நல்லூா்), மோ.வேதநாயகி ஆளவந்தாா் (மரக்காணம்), வளவனூா் பேரூா் செயலா் ஜீவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.