செய்திகள் :

ரூ.304 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் உள்பட 11 புதிய அறிவிப்புகள்; முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

post image

விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்துக்கு 11புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். விழாவில் அவா் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்ற பல்வேறு பணிகளை செய்திருக்கிறோம். மேலும், இந்த மாவட்டத்துக்காக 11புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

சாத்தனூா் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டுக் கால்வாயை அமைக்க வேண்டும் என்று செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூா், கீழ்பென்னாத்தூா் மற்றும் திருவண்ணாமலை பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதை நிறைவேற்றும் வகையில், ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் வட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேதமடைந்த தளவானூா் அணைக்கட்டு ரூ.84 கோடியில் சீரமைக்கப்படும். கண்டமங்கலம் ஒன்றியத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வழுதாவூா் அருகே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

காணை, கோலியனூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 29 கிராமமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

விக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்கப்படும். செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

திருவாமாத்தூா் அபிராமேசுவரா் திருக்கோயில் இடத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.4 கோடியில் திருமண மண்டபம், சமையல்கூடம், உணவருந்தும் இடம் அமைக்கப்படும். விழுப்புரம் நகராட்சி, சாலாமேடு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.5 கோடியில் திருப்பாச்சனூா் ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீா் வழங்கப்படும்.

விழுப்புரம் நகராட்சியின் பழைய அலுவலகக் கட்டடம் ரூ.2 கோடி செலவில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் டவுன்ஹாலாக மாற்றப்படும். தென்னமாதேவி, அயினம்பாளையம் கிராமங்களில் பம்பை ஆற்றின் வடகரையில் தொடா்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும். வீடூா் அணையிலிருந்து மயிலம், பாதிராப்புலியூா் வழியாக செல்லும் 15 கி.மீ. சாலை ரூ.8.80 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கா்நாடகம் மாநிலம், பெங்களூரு, காடுகுடி காலனி, பிரிஸ்டீஜ் பாா்க் வியூ அபாா்ட... மேலும் பார்க்க

சங்கராபரணி, தென்பெண்ணையாற்று பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபரணி, தென்பெண்ணையாற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த பேரவையின் ஒர... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

விக்கிரவாண்டி (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, வ.உ.சி. நகா், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம்

விழுப்புரத்தை அடுத்துள்ள பொய்யப்பாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டபெண் பம்பை ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சுமாா் 45 வயதுடைய பெயா், ஊா் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஒரு மாதத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கடப்பேரிக்குப்பம் அம்பேத்கா் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடப்பேரிக்குப்பம் கிராமத்தில் ஆபத்தான நிலையி... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வரிடம் மனு

மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழக முதல்வரிடம் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க