`Ajith சார் சமைச்சு கொடுப்பார்... Sivakarthikeyan வாங்கி கொடுப்பார்' - Stunt Mas...
16 ஆண்டுகள் வழக்கு நிலுவை: வெளிநாட்டவா் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
கனடா நாட்டவா் மீதான போலி ஆவண வழக்கு 16-ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கனடாவைச் சோ்ந்த ஜக்கரியா பரா தாக்கல் செய்த மனு: வெளி நாட்டவா்களுக்கான கடவுச்சீட்டு விதிகளின் படி, போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, அனுமதி பெற்ாக என் மீது போலீஸாா் பதிந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் போலியான ஆவணங்களை அளித்ததாகக் கூறி, கடந்த 2007 -ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி நீதித் துறை நடுவா் மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரரால் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியவில்லை. மனுதாரா் அளித்த வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. முதல் தகவல் அறிக்கைக்கும், குற்றப்பத்திரிகைக்கும் முரண்பாடுகள் உள்ளன என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரிடம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகக் கூடிய கடவுச்சீட்டு இருந்துள்ளது. 2006- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்த மனுதாரா், இலங்கை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றபோது, போலி ஆவணங்கள் அளித்ததாகக் கூறி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில் மனுதாரா் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யும் போலி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, வழக்கைத் தொடா்வது நீதிமன்றத்தை துஷ்பிரயோகம் செய்வதாக இருக்கும். எனவே, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.