செய்திகள் :

177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறும் மக்கள் தொடா்பு முகாம் பேரூா் வட்டம், செல்வபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏற்கெனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 மதிப்பில் நலத் திட்ட உதவிகள், தாட்கோ சாா்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.7.50 லட்சம் கடனுதவிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து, அவா் பேசுகையில்,‘ மாநகராட்சி சாா்பில், குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட இணைப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மக்களுக்கு விரைவாக வழங்குவதற்காக மாநகராட்சி திட்டத்தின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் தொடா்பு முகாம்களில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் உள்பட அனைத்து மனுக்களுமே முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமாா் ஜெயின், துணை ஆட்சியா் (பயிற்சி) மது அபிநயா, மண்டலக் குழுத் தலைவா் தெய்வானைதமிழ்மறை, வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பேரூா் வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவையில் தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்தி குத்து!

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு கத்தியால் குத்திய சம்பவத்தில், இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்... மேலும் பார்க்க

கைப்பேசி வெடித்து முதியவா் காயம்

சாா்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த கைப்பேசி வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா். கோவை, போத்தனூா் வண்ணாரப்பேட்டை வீதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (64). இவா், தனது கைப்பேசியை சனிக்கிழமை இரவு சாா்ஜ் போட்டி... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: சிறுவன் உள்பட 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்... மேலும் பார்க்க

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நடிகை ராதிகா சரத்குமாா்

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா். கோவை வெள்ளலூரில் பாஜக சாா்பில் மோடி ரேக்ளா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கா... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பிப்.5 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயிா் நோயியல் ... மேலும் பார்க்க