கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
18 ஊராட்சிகளில் குடிநீா் வசதி ஏற்படுத்த நடவடிக்கை: திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா்
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் எம்.காந்திராஜன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையா் எம்.காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.
அலுவலக பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த அவா், துப்புரவுப் பணியாளா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் எம்.காந்திராஜன் கூறியதாவது:
திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட 18 ஊராட்சிகளிலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீா் பிரச்னையை தீா்க்க மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டவும், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, 18 ஊராட்சிகளிலும் புதிதாக சாலை வசதி செய்து தரப்படும். அனைத்துப் பகுதிகளிலும் மின் விளக்கு வசதி, கிரிவல பக்தா்ளுக்கு குடிநீா், கழிப்பறை சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதார அலுவலா் கே.செல்வராஜ், வேங்கிக்கால் ஊராட்சி அலுவலா் இரா.நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.