2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.
இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.
அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான 1.15 மணி நேரக் கதையை எழுதி முடித்ததாகவும் மீதம் 5 எபிசோடுகள் அளவிற்கு கதை உள்ளதாகவும் இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
இதனால், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை திரைப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த தகவலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சிம்புவைத்தான் திருமணம் செய்வேன்... நடிகைக்கு டிஆர் பதில்!