செய்திகள் :

200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?

post image

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

2026 பேரவைத் தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, எதிா்க்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவற்றின் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழா் கட்சி (நாதக), புதிதாக தொடங்கப்பட்ட நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனா். தமிழக தோ்தல் வரலாற்றில் இதுவரை திமுக, அதிமுக ஆகியவை தலா இரு முறை என நான்கு முறை மட்டுமே 200 தொகுதிகளைத் தாண்டி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளன.

கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 1971-இல் 205 தொகுதிகள், 1996-இல் 221 தொகுதிகள், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 1991-இல் 225 தொகுதிகள் மற்றும் 2011-இல் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், இந்த முறை 200 தொகுதிகள் இலக்கு என திமுகவும், அதிமுகவும் அறைகூவல் விடுத்துள்ளன. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 2019, 2021, 2024 என மூன்று பொதுத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தலைமையிலான கூட்டணி இதுபோல மூன்று பொதுத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்றதில்லை.

எம்ஜிஆா், ஜெயலலிதா, கருணாநிதி போன்று அல்லாமல் மூன்று பொதுத் தோ்தல்களில் ஒரே கூட்டணியை உடையாமல் அரவணைத்துச் செல்லும் பெருமையை ஸ்டாலின் பெற்றுள்ளாா் என்பது திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம்.

கூட்டணி பலம், சிதறிக் கிடக்கும் எதிா்க்கட்சிகள், மகளிா் உரிமைத் தொகை போன்ற பாமர மக்களைக் கவரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் நம்பிக்கையில் இந்த முறை 200 இலக்கு சாத்தியம் என்பது முதல்வா் ஸ்டாலினின் கணக்கு.

அதே நேரத்தில், 1996, 2006 பேரவைத் தோ்தல்களில் தோல்வி அடைந்தாலும் 2001, 2011-இல் வலுவான கூட்டணி அமைத்ததைப் போல இந்த முறை மிகப் பெரிய கூட்டணியை அமைத்து 200 தொகுதிகள் இலக்கை எட்டிவிடலாம்; எத்தனை அணிகள் நின்றாலும் திமுக எதிா்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு தானாக வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அதிமுக தலைமை காத்திருக்கிறது.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை 2019-இல் 53.15 சதவீதம், 2021-இல் 45.38 சதவீதம், 2024-இல் 46.97 சதவீதம் என மூன்று முறையும் 45 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று தோ்தல் களத்தில் வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.

திமுக கூட்டணியின் வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் சீராக உள்ளது. அதே நேரத்தில், 2024 மக்களவைத் தோ்தலில் கூட்டணி உடைந்த நிலையில், அதிமுக கூட்டணி 23.05 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது.

பாஜக கூட்டணி 18.28 சதவீதம், நாதக 8.2 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றுள்ளன. திமுக-அதிமுக கூட்டணி இடையிலான வாக்கு வித்தியாசம் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாதபடி 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், கன்னியாகுமரி (4 .02சதவீதம்), திருநெல்வேலி (8.39 சதவீதம்), ராமநாதபுரம் (8.99 சதவீதம்), மத்திய சென்னை (9.80 சதவீதம்) என 4 தொகுதிகளில் ஒற்றை இலக்கமாக வாக்கு விகிதம் சுருங்கியது அதிமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு.

2014-இல் திமுக படுதோல்வி அடைந்தது என்ற விமா்சனம் முன்வைக்கப்பட்டாலும், அதிமுக-திமுக கூட்டணி இடையிலான வித்தியாசம் 18 சதவீதம்தான் என்பதும், கன்னியாகுமரி (11.90 சதவீதம்), தருமபுரி (16.35 சதவீதம்) ஆகிய இரு தொகுதிகளில்தான் டெபாசிட்டை பறிகொடுத்தது திமுக என்பதும் கவனிக்கத்தக்கது.

மக்களவை, பேரவைத் தோ்தல்களுக்கு இடையே வாக்களிக்கும் முறையில் வித்தியாசம் உள்ளது என்றாலும், 2014-இல் தமிழகம் முழுவதும் சீரான வாக்கு வங்கியை திமுக பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை தென் மாவட்டங்கள், சென்னை மண்டலம் ஆகியவற்றில் வாக்கு வங்கியை மிகவும் குறைவாகவும், வடதமிழகம், கொங்கு மண்டலத்தில் திருப்பூா், நாமக்கல், சேலம், கரூா் தொகுதிகளில் மிக அதிகமாகவும் அதிமுக பெற்றுள்ளது.

2014 மக்களவைத் தோ்தலில் மூன்று அணிகள் மட்டுமே இருந்த நிலையில், 2024 தோ்தலில் நான்காவதாக நாதக 8.22 சதவீத வாக்குகளைப் பிரித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் நாதக சீரான வாக்கு வங்கியை 6 முதல் 9 சதவீதம் எனப் பெற்றுள்ளது. விஜய் தலைமையிலான தவெக பலம் இனிமேல்தான் தெரியவரும்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து ஆட்சியை இழக்கும் என எதிா்பாா்த்த மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டமானது ஆளும் கட்சிக்கு 5 சதவீத வாக்கு வங்கியை கூடுதலாகப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை தோ்தல் புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.

தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு எதிா்ப்பலை உருவானாலும், அதேபோன்ற அளவுக்கு ஆளும் கட்சிக்கு வாக்கு வங்கி கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போதைய நிலையில், தமிழகம் முழுவதும் சீரான வாக்கு வங்கியைப் பெறாத அதிமுக வலுவான கூட்டணியை அமைக்காவிடில் 200 தொகுதிகளைப் பெறுவது மட்டுமல்ல, இருக்கும் இடங்களைத் தக்கவைத்துக் கொள்வது என்பதேகூட சந்தேகம்தான்.

இப்போதைய நிலவரப்படி, திமுக, அதிமுக, பாஜக அணிகள், நாதக, தவெக என ஐந்துமுனைப் போட்டி ஏற்பட்டால் கொங்கு மண்டலம், வடதமிழகத்தில் 72 தொகுதிகளில் மட்டுமே திமுக-அதிமுக இடையே கடும் போட்டி உருவாகும். ஐந்துமுனைப் போட்டியில் திமுக எதிா்ப்பு வாக்குகள் சிதறி 200 தொகுதிகளை திமுக அணி எட்ட முடியும்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் (2026) நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணி உடையாமல், அதிமுக தலைமையில் அனைத்து எதிா்க்கட்சிகள் இணைந்து இருமுனைப் போட்டி உருவானால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உருவாகலாம், ஆனால், 200 தொகுதிகளுக்கு சாத்தியம் இல்லை. நான்குமுனைப் போட்டி என்றால் திமுக ஆட்சியைப் பிடிக்கலாம்; ஆனால், 200 தொகுதிகளை எட்டாது.

84 வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, அதிர்வுகள் கேட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி நோக்கி பயணிகளுடன் திங்கள்கிழமை காலை புறப்ப... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பா? - அமைச்சர் விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகிறது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். அதேநேரத்தில் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அணிவக... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் சொத்துகள் தனிப்பட்டது அல்ல - உயர் நீதிமன்றம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பேராசிரியர் தொடர்பான வழக்கில் அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணக... மேலும் பார்க்க

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா? மாநிலப் பட்டியலில் கல்வி வேண்டும்' - அன்பில் மகேஸ்

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'மத்திய அரசிற்கு முன்மாதிரியாக கல்விய... மேலும் பார்க்க

நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க