செய்திகள் :

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

post image
துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்திருக்கிறது கிராமி விருதுகளுக்கான தேர்வுக் குழு. இதில் அதிக முறை நாமினேசன் செய்யப்பட்ட கலைஞர் பட்டியல் பற்றிய கட்டுரை இது.

பியான்சே (11 நாமினேசன்) :

பியான்சே ஜிசெல் நோல்ஸ் ( பியான்சே)... இவர் அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். இவர் கிராமி விருதுகளுக்காக அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 99 நாமினேசன் மற்றும் 32 முறை வெற்றி பெற்று அதிக கிராமி விருதுகளை பெற்ற கலைஞர் இவர். 2025 கிராமி விருதுகளுக்காக 11 நாமினேஷன்களில் இடம் பெற்று அதிக நாமினேசன் பெற்ற கலைஞர் ஆக இருக்கிறார்.

பில்லி ஐலிஸ் (7 நாமினேசன்) :

பில்லி ஐலிஷ் ஓர் அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். 22 வயதாகும் இவர் இதுவரை 9 கிராமி விருதுகள் பெற்றுள்ளார். 2025 கிராமி விருதுகளுக்கான 7 பிரிவுகளில் நாமினேஷன் ஆகி உள்ளார்.

சார்லி எக்ஸ்சிஎக்ஸ் (7 நாமினேசன்) :

சார்லி எக்ஸ்சிஎக்ஸ் என அறியப்படும் சார்லோட் எம்மா ஐட்சிசன் ஒரு ஆங்கில பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். 2025 கிராமி விருதுகளுக்காக 7 பிரிவுகளில் நாமினேஷன் ஆகியுள்ளார்.

போஸ்ட் மலோன் (7 நாமினேசன்கள்) :

போஸ்ட் மலோன் என்று அழைக்கப்படும் ஆஸ்டின் ரிச்சர்ட் போஸ்ட், ஒரு அமெரிக்க ராப்பர், பாடகர், பாடலாசிரியர், இசைப்பதிவு தயாரிப்பாளர் மற்றும் கிட்டார் கலைஞர் ஆவார். இவர் 2025 கிராமி விருதுகளுக்காக 7 பிரிவுகளில் நாமினேசன் ஆகியுள்ளார்.

கென்ட்ரிக் லாமர் ( 7 நாமினேசன்) :

கென்ட்ரிக் லாமர் டக்வொர்த் ஒரு அமெரிக்க ராப்பர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் ஏற்கனவே 17 கிராமி விருதுகளை வென்றுள்ளார். 2025 கிராமி விருதுகளுக்காக 7 பிரிவுகளில் நாமினேஷன் ஆகியுள்ளார்.

சப்ரீனா கார்பெண்டர் (6 நாமினேசன்):

சப்ரினா ஆன்லின் கார்பெண்டர் ஒரு அமெரிக்க பாடகி, நடிகை. இவர் டிஸ்னி தொடரான கேர்ள் மீட்ஸ் வேர்ல்டு-ல் நடித்துள்ளார். இவர் 2025 கிராமி விருதுகளுக்காக 6 பிரிவுகளில் நாமினேஷன் ஆகியுள்ளார்.

சாப்பல் ரோன் (6 நாமினேசன்) :

சாப்பல் ரோன் என்று அழைக்கப்படும் கெய்லீ ரோஸ் ஆம்ஸ்டுட்ஸ் ஒரு அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.இவர் 2025 கிராமி விருதுகளுக்காக 6 பிரிவுகளில் நாமினேஷன் ஆகியுள்ளார்.

டேலர் ஸ்விஃப்ட் (6 நாமினேசன்) :

டேலர் ஸ்விஃப்ட் அமெரிக்க பாடலாசிரியர், பாடகி, மற்றும் கிடார் கலைஞர் ஆவார். இவர் தற்போது முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவர் ஆவார். இவர் இதுவரை 14 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். 2025 கிராமி விருதுகளுக்காக 6 பிரிவுகளில் நாமினேஷன் ஆகியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Keerthi Suresh: கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் - நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் மாப்பிள்ளை ஆகிறார்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என கோலிவுட்டில் தகவல் பரபரக்கிறது. ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்... மேலும் பார்க்க

என்னை பாதித்த அசாமி திரைப்படம்... பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

"ரஜினி என்னை மூணு தடவை அடிச்சார்; இது நியாயமா?" - நடிகை விஜயசாந்தி அதிரடி பேட்டி

"'மன்னன்' படத்துல நான் நடிச்சப்போ ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்ல அமிதாப் பச்சன் சார் முதலிடத்துலயும், ரஜினி சார் இரண்டாவது இடத்துலயும், ந... மேலும் பார்க்க

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

Delhi Ganesh: ``மரணம் வரும்னு தெரியும், எப்போன்னு தெரியாதவரை நாம ராஜா'' -டெல்லி கணேஷ் நாஸ்டால்ஜியா!

டெல்லி கணேஷ் எனும் ஓர் அற்புதமான நடிகரை திரைத்துறையும் ரசிகர்களும் இழந்து நிற்கிறார்கள். அவருடன் பணியாற்றிய பலரும் அவர் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இரண்டு வருடங்களுக்க... மேலும் பார்க்க