திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
24 விரைவு ரயில்களில் 79 பொதுப்பெட்டிகள் இணைப்பு
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 24 விரைவு ரயில்களில் 79 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் இயக்கப்படும் விரைவு ரயில்களில் புதிதாக 583 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும், நடப்பு மாதத்துக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 24 ரயில்களில் இதுவரை 79 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 7,900 இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லி, மங்களூரு, போடிநாயக்கனூா் செல்லும் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூா்-தூத்துக்குடி விரைவு ரயில், கன்னியாகுமரி-ஹௌரா விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் தலா 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 27 ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.