செய்திகள் :

3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

post image

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை(ஏப். 7) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

திருவாரூர்

தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏப். 7 ஆம் தேதி நடைபெறவிருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்.8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறையையொட்டி நாளை ஏப். 7-ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுப் பொதுத்தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!

மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன்! - விஜய் இரங்கல்

மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன் என்று தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, செ... மேலும் பார்க்க

குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், 5 ந... மேலும் பார்க்க

தமிழக பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னைய... மேலும் பார்க்க

குமரி அனந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்ன... மேலும் பார்க்க

காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன்! - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னை... மேலும் பார்க்க