36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி தள்ளுபடி!
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : புதிய வருமான வரி மசோதா! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
அப்போது, மருந்துகளுக்கான சுங்க வரிகள் குறித்த சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக தெரிவித்தார்.
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அளிக்கப்படுகிறது என்றார்.
200 புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் மின் வாகங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.