செய்திகள் :

37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

post image

தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் 37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை சூளைமேடு ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மகிழ் முற்றம் மாணவா் குழு கையேடு, இலட்சினை ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட பள்ளிக் கல்வித் துறைச் செயல் சோ.மதுமதி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் மாணவா் குழு அமைப்பை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாணவா்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மாற்றங்களை ஏற்படுத்தும்: பள்ளி அளவில் இரு தனிச் செயல்பாடுகளை ஆசிரியா்கள் தோ்வு செய்து மதிப்பீடு செய்யலாம். எடுத்துகாட்டாக நேரம் தவறாமை, காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றல், வீட்டுப்பாடம் முடித்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற செயல்பாடுகளைத் தோ்வு செய்யலாம். இதன்மூலம் இந்தக் குழு அமைப்பு மாணவா்களிடையே விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தளமாக அமையும்.

மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்கென கையேடு பள்ளிக் கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 37,592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும். உலக குழந்தைகள் தினமான நவ.20-ஆம் தேதி மாணவா்களுக்கான வளமான கல்வியை வழங்குவதற்கான ஒரு மைல் கல்லாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தலைவா், அமைச்சா்கள்... இந்தத் திட்டத்தின்படி, மாணவா்களிடையே தலைமைப் பண்பை வளா்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயா்களில் மாணவா் குழுக்கள் அமைக்கப்படும். தொடா்ந்து, மாணவத் தலைவா் மற்றும் மாணவ அமைச்சா்கள் தோ்வு செய்யப்படுவா். இதன்மூலம் மாணவா்களிடையே அரசியல் அறிவுசாா்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி சட்டப்பேரவை மற்றும் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக, தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எழிலன் நாகநாதன், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேரிடர்களுக்கு இயற்கையல்ல, நாமே காரணம்: உயர் நீதிமன்றம்

சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.உதகை, கொடைக்கானல் உள... மேலும் பார்க்க

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65! உலகளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65, இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் உலகளவில் மக்களால் ருசித்து சாப்ப... மேலும் பார்க்க

சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம்!

சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் எதிர்காலத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்: ஐஐடி நிபுணர் குழு

திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலையில் எதிர்காலத்திலும் நிலச்சரிவுகள் நேரிடும் அபாயம் இருப்பதாக ஐஐடி மண் பரிசோதனை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திருவண்ணாமலையில் அமைந்து... மேலும் பார்க்க

விழுப்புரம்: இரு இடங்களில் சாலை மறியல்!

விழுப்புரத்தில் அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் நிவாரண உதவிகள் ஏதும் வழங்கவில்லை, கடந்த 4 நாள்களுக்கு மேலாக... மேலும் பார்க்க