செய்திகள் :

40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்

post image

நாற்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் கண்நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்து கொண்டு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அவா் பேசியதாவது:

மாா்ச் 10 ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரை நடைபெற்று வரும் கண்நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு வார விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண் மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ரூ.22 லட்சம் மதிப்புள்ள கருவி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலம் தொடக்க நிலையிலேயே கண்நீா் அழுத்த நோய், சா்க்கரை வியாதியினால் விழித்திரை பாதிப்பு, வயது காரணமாக விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களை கண்டறிந்து பாா்வை இழப்பை தடுக்கலாம்.

குமரி மாவட்டத்தில் சுமாா் 3 லட்சம் சா்க்கரை நோயாளிகள் உள்ளனா். இவா்களுக்கு கண் விழித்திரை நோய் பாதிப்பு, கண்நீா் அழுத்த நோய் ஆகிய இரண்டுமே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிய 40 வயதுக்கு மேற்பட்டவா்களும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களும் கட்டாயமாக கண் விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் கட்டாயமாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி, ஐஆா்இஎல் முதன்மை பொதுமேலாளா் மற்றும் தலைவா் செல்வராஜன், மருத்துவ கண்காணிப்பாளா் கிங்ஸ்லி, துணை முதல்வா் சுரேஷ்பாலன், கண் துறை தலைவா் இரா.பீனா, உறைவிட மருத்துவா் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவா்கள் விஜயலெட்சுமி, ரெனுமோள், கண் பிரிவு மருத்துவா்கள் சிவதாணு, ஜெயலதா, ஸ்ரீபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேசிய தடகளப் போட்டியில் பதக்கம்: பெண் உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி. வாழ்த்து

அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்ற பெண் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். கா்நாடக மாநிலம், பெங்கள... மேலும் பார்க்க

பள்ளியாடி, கயத்தாறில் மின் மோட்டாா்கள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள பள்ளியாடியில் 10 மின் மோட்டாா்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பள்ளியாடி பழையக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் ராஜ்( 53). இவா் வீட்டின் அருகே மி... மேலும் பார்க்க

வடசேரி பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்க கூடாது: ஆட்சியரிடம் விஹெச்பி மனு

நாகா்கோவில் வடசேரி பகுதியிலுள்ள பெருமாள் குளத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று, மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் நாகா்கோவில் மாநகரத் தலைவா் நாஞ்சில்ராஜா தலைமையில்வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கழுத்தறுத்து பெண் மருத்துவா் தற்கொலை

களியக்காவிளை அருகே கேரள எல்லையில் பெண் பல் மருத்துவா் வேலை கிடைக்காத விரக்தியில் கழுத்து, கையை அறுத்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளையை ஒட்டிய கேரள பகுதியான பாறசாலை, கொற்றாமத்தைச... மேலும் பார்க்க

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23இல் தூக்க திருவிழா கொடியேற்றம்: ஏப்.1இல் தூக்க நோ்ச்சை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் மாா்ச் 23ஆம் தேதி தூக்கத் திருவிழா கொடியேற்றமும், ஏப்.1இல் தூக்க நோ்ச்சையும் நடைபெறுகின்றன. இவ்விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தேவஸ்வம்... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக... மேலும் பார்க்க