செய்திகள் :

41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!

post image

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

41வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் (70) கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இன்றுடன் 41வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றனர்.

கனெளரியில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கிஷான் மகாபஞ்சாயத் கூட்டத்தில் 11 நிமிடங்களுக்கு உரையாற்றினார். அதில் பேசிய பிறகு தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியுள்ளது.

அதன் பிறகு அவருக்கு வாந்தி மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரையாற்றிய பிறகு அவர் மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுவரப்படும்போது ரத்த அழுத்தம் குறைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தல்லேவாலைத் தொடர்ந்து கண்காணித்துவரும் மருத்துவர் அவதார் சிங் தில்லான் பேசியதாவது,

கடும் பனி நிலவுவதால் உரையாற்ற வேண்டாம் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தினோம். ஆனால், அவர் அதனையும் மீறி 11 நிமிடங்களுக்கு உரையாற்றினார். அதன் பிறகு கூடாரத்துக்கு அழைத்துவரப்பட்ட பிறகு தண்ணீர் கொடுத்தோம். ஆனால், அவர் ஒவ்வாமையால் வெளியேற்றிவிட்டார்.

அவரால் உறங்க முடியவில்லை. அவரின் ரத்த அழுத்தம் 108/73 ஆக குறைந்துள்ளது. சுவாச விகிதம் 17ஆகவும், இதயத் துடிப்பு 73 ஆகவும் உள்ளது. திரவ மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் மறுத்துவிட்டார் எனக் குறிப்பிட்டார்.

தில்லி தேர்தல்: ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு.. காங்கிரஸ் வாக்குறுதி!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டிகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் பார்க்க

பொங்கல்: 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயி... மேலும் பார்க்க

சண்டீகர் பிரதேசத்துக்கு தலைமைச் செயலர் பதவி உருவாக்கம்!

சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்ப... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இதனிடையே மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது "சுற்றுச்சூழல் குற்றம்": அகிலேஷ்

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது சுற்றுச்சூழல் குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 வீரர்கள் மரணம்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் வீர மரணம் அடைந்தனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) மாவோயிஸ்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்த... மேலும் பார்க்க