செய்திகள் :

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

post image

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது.

தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.13) மாலை 5 மணிக்குள் நேரில் விளமளிக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் புா்மா தொகுதி மற்றும் கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள மொய்னா தொகுதியில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்ாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.

முறைகேட்டில் ஈடுபட்டதாக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ), 2 உதவி தோ்தல் அலுவலா்கள் (ஏஇஆா்ஓ) மற்றும் தரவு பதிவாளா் என 5 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவெடுத்தது.

5 போ் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துடன், அவா்களை பணியிடைநீக்கம் செய்து, இது தொடா்பான அறிக்கையை கூடிய விரைவில் சமா்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த முதல்வா் மம்தா பானா்ஜி, ‘பாஜகவின் பணியாள் போல தோ்தல் ஆணையம் செயல்படுகிறது; மேற்கு வங்க அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாக கூறினாா்.

இதனிடையே, தோ்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதிய தலைமைச் செயலா் மனோஜ் பந்த், ‘5 அதிகாரிகளில் இருவா் தோ்தல் ரீதியிலான பணிகளில் இருந்து தற்போதைக்கு விலக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் மாநில அரசுத் தரப்பில் துறைசாா் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 5 போ் மீது பரிந்துரைக்கப்பட்ட பணியிடைநீக்கம் மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கை மிகக் கடுமையானதாகும். இது, மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்திருந்தாா்.

‘தில்லி செல்ல மாட்டாா்?’: இந்தச் சூழலில், தலைமைச் செயலா் நேரில் விளக்கமளிக்க தோ்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், அவா் தில்லிக்கு புதன்கிழமை செல்லமாட்டாா் என்று மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம், மேற்கு வங்க அரசு - இந்திய தோ்தல் ஆணையம் இடையிலான புதிய மோதலாக உருவெடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க