கோவை: திமுக மாநகர மாவட்டச் செயலாளர் மாற்றமா? - பின்னணி என்ன?
5-ம் நாளாக சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!
தொடர்ந்து 5-வது நாளாக பங்குச் சந்தை வர்த்தகம் இன்றும்(வியாழக்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,574.31 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது.
காலையில் வர்த்தகம் பெரிய மாற்றமில்லாத நிலையில் பிற்பகலில் கடும் சரிவைச் சந்தித்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 555.95 புள்ளிகள் குறைந்து 81,159.68 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த 5 நாள்களில் சென்செக்ஸ் 1,854 புள்ளிகள் குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166.05 புள்ளிகள் குறைந்து 24,890.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
அமெரிக்காவில் எச்1பி விசா கட்டண உயர்வால் இன்றும் ஐடி பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
நிஃப்டி மெட்டல் (0.22%) உயர்ந்தது. அதைத் தவிர மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன,
அதிகபட்சமாக நிஃப்டி ரியாலிட்டி (1.65%) சரிந்தது. நிஃப்டி ஐடி (1.27%), ஆட்டோ (0.92%), பார்மா (0.92%),, எஃப்எம்சிஜி (0.50%) இழப்பைச் சந்தித்தன.
நிஃப்டி வங்கி 0.26 சதவீதம் சரிந்த அதே நேரத்தில் நிதி சேவைகள் 0.53% சரிந்தது.
சென்செக்ஸில் டிரென்ட் 3.58% சரிந்தது. பவர் கிரிட் 3.05%, டாடா மோட்டார்ஸ் 2.73%, டிசிஎஸ் 2.53%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.15%, என்டிபிசி 2.07% சரிந்தன.
அதேநேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தைச் சந்தித்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1,478 பங்குகள் லாபமடைந்தும் 2,700 பங்குகள் சரிந்தும் 141 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.