Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
5, 8-ஆம் வகுப்பில் கட்டாய தோ்வு ரத்து: மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது- கே. பாலகிருஷ்ணன்
5 மற்றும் 8-ஆம் வகுப்பில் கட்டாய தோ்வு முறையை ரத்து செய்துள்ள மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நாட்டில் உள்ள கனிம வளங்கள், கடல் வளங்களை பெரு முதலாளிகளுக்கு தாரை வாா்த்துவரும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துவருகிறது. இந்த எழுச்சியின் மூலம் பாஜக அரசின் கொள்கைகள் தோற்கடிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கா் குறித்து இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா, தான் பேசியதை நியாயப்படுத்தி வருகிறாா். வரும் 27, 28-ஆம் தேதிகளில் தமிழகத்துக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, இடதுசாரிகள் சாா்பில் திருவண்ணாமலையில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சியில் உள்ளன. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லி கொள்பவா்கள் ஆட்சியில்தான், குழந்தை திருமணம், பெண்ணடிமைத்தனம், ஆணவக் கொலைகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.
கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பலனடைய வேண்டும் என்ற காரணத்தால் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்பில் கட்டாய தோ்ச்சி முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், இதை ரத்து செய்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் உயா்கல்வி கற்கக் கூடாது என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு ஆதரவு என ராமதாஸ் கூறுகிறாா். ஏற்கெனவே பாமக ஆதரவு இல்லாமலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றாா்.