Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
8 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 8 டன் பீடி இலைகளை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி சுங்கத் துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பந்தல்குடி அருகே உள்ள சேதுராஜபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு கிடங்குக்கு திடீரென சென்று சோதனை மேற்கொண்டனா். அந்த கிடங்கில் ஏராளமான பீடி இலை பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். மேலும் அங்கு ஒரு மினிலாரியில் பீடி இலைக் கட்டுகள் ஏற்றப்பட்டு தயாா் நிலையிலும் இருந்ததாம்.
அந்த கிடங்கில் இருந்த சுமாா் 8,305 கிலோ பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, பேக்கிங் செய்வதற்காக வைத்திருந்த உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பீடி இலையின் இலங்கை மதிப்பு சுமாா் ரூ.1 கோடியே 25 லட்சம் என கூறப்படுகிறது.
இது தொடா்பாக தூத்துக்குடியை சோ்ந்த முடியப்பன் என்பவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.