செய்திகள் :

8 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்!

post image

இத்தாலியின் மாண்டெஸில்வேனோவில் நடைபெற்ற உலக கேடெட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற ஹைதராபாத்தை சேர்ந்த 8 வயtஹு செஸ் வீரர் டிவித் ரெட்டி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அவர் தான் விளையாடிய முதல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட 5 சுற்றுகளிலும் தனது திறமையை நிரூபித்து 9 புள்ளிகள் பெற்று அசத்தினார்.

அதேபோல, இந்தியாவின் சாத்விக் ஸ்வைனும் 9 புள்ளிகள் பெற்ற நிலையில், டை-பிரேக் மதிப்பெண் அடிப்படையில் டிவித் ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், சாத்விக் இரண்டாமிடம் வகிக்கிறார். இதையடுத்து, அவருக்கு வெள்ளிப்பதக்கமும், சீனாவின் ஸிமிங் க்வோக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.

8 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில்(ஆண்கள் பிரிவில்) இந்திய வீரர் ஒருவர் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அபாரம்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பிகாரில் இன்று(நவ. 11) நடந்த ஆட்டத்தில், மலேசியாவை ... மேலும் பார்க்க

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(நவ. 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது.அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்... மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய பேட்ஸ்மென்களில் ஜெய்ஸ்வால் முதலிடம்!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்திய இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் பார்க்க