8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞா் கைது
தஞ்சாவூரில் 8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நிகழ்விடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதில் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தமிழ் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன் (32) என்பது தெரியவந்ததையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.