செய்திகள் :

பேராவூரணி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

post image

பேராவூரணி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில், புதிய பேருந்து தொடக்க விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

புதிய பேருந்தில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் படியில் பயணம் செய்யாதீா்கள் என குரல் பதிவு செய்யப்பட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (தொழில்நுட்பம்) எஸ். ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளா் கே.மகாலிங்கம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலா் எஸ் .ஆா்.என். செந்தில்குமாா், அயலக அணி மாவட்ட அமைப்பாளா் எஸ். ஷாஜகான் மற்றும் கட்சியினா், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லாரி விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே சனிக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், இரும்பு தலை கிராமம் மாதா கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூரில் 8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அட... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு தீா்வு

திருவிடைமருதூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவிடைமருதூா் நீதிமன்ற வளாக்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை... மேலும் பார்க்க

மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் ... மேலும் பார்க்க

மே 10-இல் கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு

அனைத்து இனங்களுக்கும் சம எண்ணிக்கை கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்றத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் மே 10-ஆம் தேதி கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு நடத்துவது எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ... மேலும் பார்க்க