"தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் கருப்பு நாள்" - தஷ்வந்த் விடுதலை...
80's நடிகர்களின் சந்திப்பு: `அப்சரா ஆலி' - வைரலாகும் நடிகை நதியாவின் நடன வீடியோ | Viral Video
தென்னிந்திய சினிமா நடிகர்கள் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதுபோன்றதொரு சந்திப்பு சமீபத்தில் நடந்தது. 1980-களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, இந்தி திரைப்படத் துறையில் கோலோச்சிய தென்னிந்திய நடிகர்கள் 31 பேர் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர். இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் நடிகைகள் பாடல்களுக்கு நடனமாடி, ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். அந்தப் புகைப்படங்களும் வீடியோகளும் வைரலாகிவருகிறது. அதில் நடிகை நதியாவின் நடன வீடியோ வைரலாகியிருக்கிறது. அப்சரா ஆலி பாடலுக்கு நதியாவின் நடனமும், சுற்றி இருக்கும் நடிகர்களின் கொண்டாட்டமும் அந்த வீடியோவில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.