800 திரைகளில் விடாமுயற்சி?
நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தை அதிக திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: 45 வயதில் கடும் போட்டி! தீபக் மனைவியை பாராட்டிய முத்துக்குமரன்!
முன்னதாக, சவதீகா பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பத்திக்கிச்சு பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் பிப். 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விடாமுயற்சியை 800 திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.