செய்திகள் :

99 % பயனாளிகளுக்கு தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

தமிழகத்தில் 99 சதவீத பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை (2025-26) அறிவிப்பின்படி, நகா்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்க நடவடிக்கைகளை சென்னை தியாகராய நகரில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி சேவைகள் குறித்ப் விழிப்புணா்வு கையேட்டினை வெளியிட்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்திலுள்ள 25 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் உள்ள 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது செயல்பாட்டில் உள்ள 500 மையங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

11 வகை தடுப்பூசிகள்: தமிழகத்தில் 11 வகையான தடுப்பூசிகள் கா்ப்பிணிகளுக்கும், 12 வகையான தடுப்பூசி குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. அதாவது காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்புளூயன்ஸா நிமோனியா, ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து இந்தத் தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கா்ப்பிணிகளுக்கும், 8,76,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் 99 சதவீத பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒரு மகத்தான சாதனை படைத்துள்ளது.

36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் 255 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவனைகளிலும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு சேவைகள், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 12 விரிவான சேவைகள் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்வில் எம்எல்ஏ நா.எழிலன், சுகாதாரத் துறை செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க! அண்ணன் மகளுக்கு அரியாசனத்தில் இடம்! - உதகையில் ருசிகரம்

உதகை மலர்க் கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உதயசூரியனுக்கு ஒட்டுப் போடுங்க' என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் க... மேலும் பார்க்க

உதகை மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்!

உதகையில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார். கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க