விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும்: கே.டி.ராஜேந்திர பாலாஜ...
ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன?
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராகப் பேசினார்.
அடுத்த நாளே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கினார்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. இது பாஜக - அதிமுக கூட்டணியிலும் சர்ச்சைகள் வெடிக்க வைத்திருகிறது. டிடிவி தினகரன் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று NDA கூட்டணியிலிருந்து விலகிவிட்டார். இப்படியாக சர்ச்சைகள் வெடிக்க பழனிசாமி, அமிஷாவைச் சந்தித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மினி மாரத்தானை தொடங்கிவைத்தார் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார். இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

இதையடுத்து திண்டுக்கல்லில் பாஜக சார்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார் நயினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் அதிமுக - பாஜக விவகாரம், அதிமுக ஒன்றிணைவு குறித்து ஏதும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs