செய்திகள் :

AI: "இனி வாரத்தில் மூன்றரை நாள்கள் வேலை செய்தால் போதும்..!" - ஏஐ குறித்து அமெரிக்க CEO கூறுவதென்ன?

post image

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாமி டிமோன், ஏ.ஐ குறித்து கூறிவரும் கருத்துகள் கவனிக்கப்படுகின்றன. ஏ.ஐ நம் அலுவலகங்களில் பாஸிடிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார் ஜாமி.

சமீபத்தில் ஏ.ஐ தாக்கத்தால் வாரத்துக்கு 3.5 நாட்கள் மட்டும் பணியாளர்கள் வேலை செய்தால் போதும் என்ற நிலை உருவாகும் எனப் பேசியிருக்கிறார்.

பொதுவாக ஏ.ஐ தாக்கத்தால் வேலையிழப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவுகையில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஊழியர்களின் work-Life Balance-ஐ மேம்படுத்தவும் ஏ.ஐ உதவியாக இருக்கும் என்கிறார் ஜாமி.

ப்ளூம்பெர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர், "உங்கள் குழந்தைகள் டெக்னாலஜியால் கேன்சர் இல்லாமல் 100 வயது வரை வாழ்வார்கள். மேலும் அவர்கள் வாரத்துக்கு மூன்றரை நாட்கள்தான் வேலை செய்வார்கள்" எனக் கூறினார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி மோர்கன் வங்கியை நிர்வகிக்கும் ஜாமி டிமோன், வங்கிப் பணிகளில் தவறுகளைக் கண்டறிதல், டிரேடிங், ஆய்வு உள்ளிட்ட துறைகளில் ஏ.ஐ-யைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

AI

ஏ.ஐ இன்னும் பல மடங்கு வளரும் எனக் கூறிய அவர், நமது வேலை பழுவில் 60 முதல் 70 விழுக்காடு ஏ.ஐ-ஆல் குறைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஏஐ-ஆல் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழப்பது ஜாமிக்கு அச்சுறுத்தலாகத் தெரியவில்லை. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 30 கோடி பேர் ஏ.ஐ-ஆல் வேலை இழப்பர் எனக் கணித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, சமூகம் எப்போது டெக்னாலஜிக்கு ஏற்றபடி தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் எனப் பதிலளித்துள்ளார் ஜாமி.

"எல்லாரும் நிதானமாக மூச்சை இழுத்து விடுங்கள். டெக்னாலஜி எப்போதும் வேலைகளை மாற்றியமைத்திருக்கிறது." என அவர் கூறியுள்ளார். அதேவேலையில் ஏ.ஐ தொழில்நுட்பம் தவறான மனிதர்களால் பயன்படுத்தப்படும்போது அதன் தாக்கம் மோசமானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். சைபர் போர்கள் கூட வருங்காலத்தில் நடக்கலாம் என அவர் கூறுகிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

``தயவுசெய்து இறந்துவிடு, இந்த பூமிக்கு நீ பாரம்..'' - மாணவருக்கு அதிர்ச்சி தந்த கூகுள் AI ஜெமினி

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தைச் சேர்ந்த 29 வயது பட்டதாரி மாணவர் விதய் ரெட்டி. இவர் கூகுளின் செயற்கை நுண்ணறிவான (AI) ஜெமினியிடத்தில் (Gemini) சாதாரணமாக, முதியோர் பராமரிப்பு குறித்துக் கே... மேலும் பார்க்க

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... உங்கள் விகடன் App-ல்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

BSNL: இனி மொபைலில் சிம் கார்டே இல்லாமல் பேசலாம்... முதல் கட்ட சோதனையில் பிஎஸ்என்எல் வெற்றி..!

சிம் கார்டே இல்லாமல் போன் பேசும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட் (Viasat) உடன் இணைந்து, BSNL நிறுவனம் தனது டைரக்ட் டு டிவைஸ... மேலும் பார்க்க

`அவள் விருதுகள்' விழாவில் அறிமுகமான Vikatan Play; ஆடியோ வடிவில் வெளியான `நீரதிகாரம்'

Vikatan Play - ஆச்சர்யங்களுக்குத் தயாராகுங்கள்...தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள்' விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்ச... மேலும் பார்க்க